அனைவருக்கும் வணக்கம் வரும் மாதம் பங்கு சந்தை எந்த மாதிரியான நிகழ்வுகளை சந்திக்க போகிறது என்பதை கிரக ரீதியாக விளக்கவே இந்த பதிவு....கீழே உள்ள வரைபடத்தில் இந்த மாதம் ஒவ்வொரு கிரகமும் கடக்கும் பாகையை குறிப்பிட்டுள்ளோம். இதில் சில இடங்களில் ஒரு கிரகம் இன்னொரு கிரகத்தை கிடைக்கும் நாட்களை வட்டமிட்டு காட்டியுள்ளோம்.
சந்திரன் ஒரு மாதத்தில் அனைத்து கிரகங்களையும் கடந்து செல்லும். மற்ற கிரகங்கள் ஒரு குறிப்பிட்டுள்ள நாட்களில் மட்டுமே கடக்கும். அப்படி கடக்கும் போது பங்கு சந்தையில் எந்த மாதிரி மாற்றம் நடக்கும். குறிப்பாக வரும் 09/01/2017 -ம் தேதி கேதுவை சுக்ரன் கடக்கிறது. கேதுவை சுக்ரன் நெருங்கும் போது எந்த மாதிரியான மாற்றங்கள் எந்த பங்குகளின் மீது நடக்கும், கடந்த பின்பு எந்த மாதிரி நடக்கும். (குறிப்பாக BANKNIFTY ) கேதுவை நெருங்கும் வரை banknifty இறக்கத்திலும் கடந்த பின்பு ஏற்றமாகவும் இருக்கும்.
இந்த மாதிரி ஒவ்வொரு மாற்றங்களையும், ஒரு கிரகத்தில் இருந்து இன்னொரு கிரகம் இருக்கும் தொலைவையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் சந்தை நகர்வுகளை எப்படி கணிப்பது என்பதை எங்கள் வகுப்புகளில் எடுத்து தரப்படும்.
ஒன்றை மட்டும் நாங்கள் தெளிவாக தெரிவித்துக்கொள்கிறோம் பங்கு சந்தையின் ஒவ்வொரு நிகழ்வும் கிரக நகர்வுகளை ஒட்டியே நடக்கிறது என்பதை எங்களால் உறுதியாக கூற முடியும். ஒரு பெண்ணும் ஆணும் வெறும் கண்களினால் பார்வையினால் பேசாமலே காதல் பிறக்கும் என்றால்? ஒரு கிரகத்தின் பார்வை சேர்க்கை எப்படி பங்கு சந்தையில் பிரதிபலிக்கும் என்பதே எங்களின் ஆராய்ச்சி. இங்கே ஒரு கிரகம் மற்றோரு கிரகம் கடப்பதை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இது போல் கிரங்களின் திரிகோண , கேந்திர , எதிர் முனை சந்திப்புக்கள் எப்படி சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது போன்ற விபரங்களுக்கு எங்கள் வகுப்புகளில் கலந்துகொள்ளலாம்.
அன்புடன்
கி சுரேஷ்குமார்