வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

கேள்வி பதில்

கேள்வி 1
பங்கு சந்தையில் 2 பேர் ஈடுபடுகிறார்கள் அதில் ஒருவருக்கு ஜாதகம் சாதகமாக உள்ளது மற்றோருவருக்கு பாதகமாக உள்ளது என்று வைத்துக்கொள்வோம்,  இப்பொழுது சாதகமாக உள்ளவர் வர்த்தகம் செய்வதையே பாதகமாக உள்ளவரும்  செய்தால் இருவரும் லாபம் அடைவார்களா அல்லது நஷ்டம் அடைவார்களா ???
பதில் 
அருமையான கேள்வி, நிச்சசயம் சாதகமாக உள்ளவருக்கு லாபமும் பாதகமாக உள்ளவருக்கு நஷ்டமும் ஏற்படும். எப்படி என்றால் இந்த மாதிரி பல சோதனைகளை நங்கள் செய்துவிட்டோம் , இப்படி இரு வேறு ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கும் தலா ஒரு லட்ஷம் கொடுத்து ஒருமண்டலம் (48 நாட்கள்) வர்த்தகம் செய்ய சொல்லுங்கள், நிச்சயம் நாங்கள் சொல்வதே நடந்திருக்கும், காரணம் சாதகமாக உள்ளவர் சந்தை இறக்கத்திலும் ஏற்றத்திலும், லாபத்திலும் நஷ்டத்திலும் ஒரே மாதிரி மனநிலையுடன் இருப்பார், ஆனால் பாதக ஜாதக அமைப்பு உள்ளவர் நஷ்டம் ஏற்படும் போது பதட்டத்திலும் லாபம் வரும் போது ஒரு வித மமதையில் அடுத்தகடட வர்த்தகத்தை முதலாமவர் செய்வதற்குள் ஏதேனும் தவறாக செய்து மாட்டிக்கொள்வார். இதில் நாங்கள் சொல்வதெல்லாம் ஒருவருடைய கிரக சூழ்நிலைகள் அவர் மனநிலையை நிச்சயம் மாற்றி விடும் என்பதே. 

Kaalabiravaa almanac

Kaalabiravaa almanac