தமிழ் சந்தை வாசகர்களுக்கு வணக்கம், ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் இன்று பதிவிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இந்த வருட தொடக்கத்திலே இங்கே கூறியதை போல பங்கு சந்தை மிகவும் அதிகமான ஊசலாட்டங்களோடே இருக்கிறது, மேலும் இது வரும் நாட்களிலும் தொடரும் என்பதே வேதனையான ஒன்று. அடுத்த ஒர் ஆண்டுகளில் யூக வணிகத்தில் (F&O) ஈடுபடுபவர்கள் பெருத்த நஷ்டத்தை சந்திக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். ஆகவே முன்னெச்சரிக்கையாக செயல் பட வேண்டும் என்பதை இங்கே மிக கவனத்துடன் தெரியபடுத்த விரும்புகிறோம். அடுத்த 3 மாதங்களும் சந்தை பெரிய அளவில் மேலே செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் முதலிலே குறிப்பிட்டதை போல 7396-க்கு கீழ் முடியுமானால் சந்தை எந்தவொரு அடிமட்ட பகுதிவரை செல்லும் என்று யாராலும் தெளிவாக கூர இயலாத ஒன்று. தற்போது சந்தை தோராயமாக 6889 பின் 6561 என்ற இலக்கை நோக்கி நகர்வதாகவே நாங்கள் கருதிகிறோம். ஆக அதற்க்கு தகுந்தவாரு உங்கள் வர்த்தகத்தை செய்துகொள்ளவும். ஒருவேளை சந்தை மேலே செல்வதாக இருந்தால் 7745-க்கு மேல் 3 முறை தொடர்ந்து வர்த்தகம் முடிவு பெற வேண்டும். அது வரை சந்தை எவ்வளவு மேலே சென்றாலும் அதை நாம் விற்பதற்காக மட்டுமே பயன்படுத்தி கொள்ளவேண்டும். மேலே செல்கிறது என்று வாங்கினால் பின்பு அது நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். இன்வெஸ்டார்கள் சற்று இலைபாறுவது நன்று.
நாங்கள் இங்கு தின, குறிகிய, நீண்ட காலவர்த்தகமோ செய்ய பரிந்துரைப்பதில்லை. நாங்கள் இங்கே செய்வதெல்லாம் சந்தை போக்கின் நகர்வுகளை மட்டுமே, ஆனால் தனிபட்ட ஒருவரின் வர்த்தகத்திற்க்கு பரிந்துரை செய்யவேண்டுமானால் அவர்களது ஜோதிட கட்டத்தை ஆராய்ந்து தான் பரிந்துரை செய்ய முடியும். தற்சமயம் சந்தை மேலே செல்ல எந்தவொரு கிரங்களும் சாதகமாக இல்லை. ராகு, கேது மற்றும் குரு போன்ற கிரகங்கள் சாதகமாக இல்லை. குரு வக்கரத்தில் இருப்பது அவ்வளவு சிறந்ததாக இல்லை. எனவே கவனமாக செயல்படவேண்டும். கட்டுமான துறை பங்குகள் இந்த மாத இறுதிக்கு மேல் 10-20% மேலே செல்ல வாய்ப்பு இருக்கிறது. வர்த்தக செய்யும் முன் கவனமாக செயல்படவேண்டும்.
=====================================
அன்புடன்
கி சுரேஷ்குமார்