அனைவருக்கும் தமிழ் சந்தையின் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். வருகின்ற மாதம் சந்தை எப்படி இருக்கும் என்ற சிறிய அலசலே இந்த பகுதி. கடந்த மாதம் நாம் குறிப்பிட்டதை போல சந்தை இறங்கியது ஆனால் கடைசி வாரத்தில் வெளிநாட்டவரின் விடுமுறை காரணித்தினால் சரியான சந்தை VOLUME இல்லை, ஆயினும் சந்தை நமது இலக்கான 7400-7420-யை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மால் உணரமுடிகிறது. மீண்டும் ஒரு முறை நாங்கள் இங்கே சொல்வதெல்லாம் சந்தை 7396-க்கு கீழ் முடிவடைந்தால் மட்டுமே பலத்த பின்னடைவை சந்திக்க நேரிடும், அதுவரை சந்தை பற்றிய கவலை தேவையில்லை. இந்த சரிவானது மிகவும் சரியான ஒன்றே, ஏனெனில் ஒரு நீண்ட கால முதலீடுகளுக்கு 7396 என்ற புள்ளியானது மிகவும் சக்திவாய்ந்தது. ஆகவே அதை உறுதி செய்ய சந்தை ஒருமுறை அந்த இலக்கை அடைய வேண்டும். மேலும் 7400-7420 என்ற புள்ளிகளுக்கிடையில் ஒரு நாளாவது CLOSE ஆக வேண்டும். அனைவரும் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துகொள்வோம், சந்தை 7400 அருகில் வரும் பொழுது நீங்கள் எதை வேண்டுமானாலும் எந்த பங்கை வேண்டுமானாலும் வாங்கலாம் SL 7396-க்கு கீழ் ஒரு நாள் CLOSE ஆனாலும் சந்தையை விட்டு வெளியேறவும். நாங்கள் உறுதியாக நம்புவது தேசிய பங்கு சந்தை குறியீடு 31-டிசம்பர் 2017 வரை 7396-க்கு கீழ் முடிவடையாது.
கிரக ரீதியாக பார்க்கும் பொழுது வருகின்ற ராகு கேது பெயர்ச்சி அவ்வளவு சிறப்பானதாக இல்லை. குறிப்பாக யூக வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. டீரேங்கில் ஈடுபடுபவர்கள் சற்று கவனமுடன் வர்த்தகம் செய்ய வேண்டும், இல்லை எனில் மிகுந்த நஷ்டத்தை சந்திக்க வேண்டும். மேலும் குரு வக்ரம் பெரும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அடுத்த 2-3 மாதத்திற்கு சந்தை பெரிய அளவில் மேலே செல்ல வாய்ப்பில்லை.
மேலும் ஏதேனும் சந்தேகம் எனில் எங்களை WHATS APP-ல் தொடர்பு கொள்ளவும் 893655142
---------------------------
அன்புடன்
கி சுரேஷ்குமார்