புதன், 30 டிசம்பர், 2015

புத்தக மதிப்பு

                 புத்தக மதிப்பு என்றால் என்ன? என்று பார்ப்போம். ஒரு பங்கின்  புத்தக மதிப்பு (Book Value) எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். பொதுவாக  புத்தக மதிப்பு (Book Value) என்பது சந்தை விலையை நிர்ணயிப்பது இல்லை என்றாலும், ஒரு பங்கின் Book Value நல்ல நிலையில் இருந்தால் தான், அந்த நிறுவனம் ஏற்கனவே நல்ல முறையில் நடத்தப்பட்டு அதனால் லாபம் அடைந்திருக்கிறது என்று அர்த்தம்.  புத்தக மதிப்பு(Book Value) என்பது அந்த நிறுவனம் ஏற்கனவே சம்பாதித்து வைத்திருப்பதால் அடைந்திருக்கும் மதிப்பு. ஆனால் சந்தை விலை என்பது, எதிர்காலத்தில் இந்த நிறுவனம் எப்படி வளரும் என்னும் கணிப்பை வைத்து நிர்ணயிக்க படுகிறது. அதனால் அனேகமாக எல்லா பங்குகளின் சந்தை விலையும், Book Value-வை விட அதிகமாகவே இருக்கும். ஆனால் இதற்கு மாறாக, சில பங்குகளின் Book Value சந்தை விலையை விட அதிகமாக இருக்கும். ஏன் இப்படி? சில நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் இன்னும் பிரபலம் ஆகாமல் இருக்கலாம். நல்ல நிலையில் நிறுவனம் நடந்துகொண்டிருந்தாலும், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்காத வரை அந்த நிறுவன பங்கின் சந்தை விலை கூடுவது என்பது கஷ்டமான காரியம். இன்று மிக பிரபலமாக இருக்கும் பல நிறுவனங்கள் ஒரு காலத்தில் வெளி உலகுக்கு தெரியாமல் இருந்தவைதான். அதனால் அப்படி பட்ட நிறுவனத்தின் பங்குகளை கவனமாக தேர்ந்தெடுத்து வாங்கினால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கொடுக்க வாய்ப்பு உண்டு. இந்த மாதிரி சந்தை விலையை விட Book Value அதிகம் இருக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதை Value Buy என்று சொல்கிறார்கள்.

             புத்தக மதிப்பை இன்னும் தெளிவாக விளக்க வேண்டும் என்றால், ஒரு நிறுவனம் இன்று அதனை மூடும் நிலைக்கு வரும் ஆனால், ஒவ்வொரு பங்குக்கும் அந்த நிறுவனம் கொடுக்கும் அதிகபட்ச விலை தான் இந்த  புத்தக மதிப்பு.  புத்தக மதிப்பு(Book Value) அதிகம் இருக்கிறது என்பதற்காக மட்டுமே பங்குகளை வாங்கி விடக்கூடாது. அந்த நிறுவனம் என்ன தொழிலில் இருக்கிறது, அந்த தொழிலுக்கு எதிர்காலத்தில் இருக்கும் வாய்ப்பு, Promotors என்று சொல்லப்படும் நிறுவனத்தை ஆரம்பித்தவர்களை பற்றி தெரிந்துகொள்ளுதல் மற்றும் Promotors நிறுவனத்தில் எவ்வளவு பங்கு வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் அலசி பார்த்து வாங்கவேண்டும்
--------------------------
அன்புடன்
கி சுரேஷ்குமார்

புதன், 16 டிசம்பர், 2015

தமிழ்சந்தை சாஃப்ட்வேர்

                 தமிழ்சந்தை சாஃப்ட்வேர் சில முக்கிய நுணுக்கங்களையும் டெக்னிகல் டூல்சையும் வைத்து உருவாக்கபட்டது. இதனை இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ளோம். அந்த இரண்டு பகுதிகளின் போட்டோ காப்பியையும் இதனுடன் அளித்துள்ளோம். இந்த முதல் பகுதியை பயன்படுத்தி நாம் நமது தின மற்றும் அந்த வார வர்த்தக புள்ளிகளை கண்டறியலாம். மேலும் அதனுடன் மூவிங் ஏவரேஜ், 52 வார High & Low, RSI, MACD.... போன்ற தகவல்கள் உள்ளன. புகைபடம் கிழே...
       இரண்டாவது பகுதியில் SHORT TERM TREND 1 & 2-ம் அளித்துள்ளோம், இதனை பயன்படுத்தி 7-10 நாள் மற்றும் 2-3 மாத குறுகிய கால வர்த்தக முடிவுகளை எடுக்க முடியும். மேலும் தவறான வர்த்தக முடிவுகளை நாம் தவிர்க்கவும் முடியும். புகைபடம் கிழே...
              இந்த சாஃப்ட்வேர் எங்களது வகுப்புகளை பங்கேற்பவர்களுக்கு 1 மாதம் இலவசமாக வழங்கபடும். மேலும் தங்களுக்கு இந்த சாஃப்ட்வேர் மட்டும் வேண்டும் எனில் மாத கட்டணமாக ரூ453/= அல்லது வருட கட்டணமாக ரூ3900/= செலுத்த வேண்டும்.

அன்புடன்
கி சுரேஷ்குமார்

செவ்வாய், 8 டிசம்பர், 2015

டிசம்பர் மாத சந்தை

                      தமிழ்சந்தையின் முதல் வணக்கம்.... இந்திய பங்கு சந்தை இந்த மாதம் எப்படி இருக்கும்? மேலும் இந்த வருடம் முடிவில் சந்தை எங்கு இருக்கும்? என்ற ஓர் சிறிய ஆய்வு மட்டுமே. கடந்த 10 வருட சந்தை வரலாற்றில் வைத்து நாம் கணித்தது யாதெனில், இந்த வருடத்தில் சந்தை இன்னும் இறங்கும் வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. சரியான சொல்லவேண்டும் என்றால் இந்த வருடத்தின் கடைசி நாள் இந்த வருடத்தின் குறைந்தபட்ச புள்ளியாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இன்னும் துள்ளியமாக சொல்லவேண்டும் என்றால் 7400-7420 இந்த இடைபட்ட புள்ளியில் சந்தை ஒருமுறையாவது ஃக்ளோஷ் ஆக வேண்டும். அப்படி ஃக்ளோஷ் ஆகும் பட்சத்தில் அதன் பின் வரும் நாட்கள் காளைகளுக்கு மிகவும் சாதகமான நாட்களாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் 7396-க்கு கீழ் சந்தை ஃக்ளோஷ் ஆகும் பட்சத்தில் சந்தை மிகவும் மோசமான நிலைக்கு செல்ல வாய்ப்பு அதிகம். ஆனால் எங்களது ஆய்வின் படி 7396-யை சந்தை இன்னும் ஒரிரு ஆண்டுகளுக்கு ஃக்ளோஷ்ங் அடிப்படையில் உடைக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும்.
              மேலும் கிரக ரீதியாகவும் சந்தை பெரிய அளவில் மேலே செல்வதற்கு ஏற்ற எந்த அறிகுறியும் இல்லை என்றே தெரிகிறது. பப்ளிக் செக்டார் பேங்கு பங்குகளில் இன்வஸ்ட் செய்யலாம். ஆட்டோமொபைல் துறை சற்று நன்றாக இருக்கும். ஆயில் பங்குகளை தற்சமயம் தவிர்க்கலாம்.

அன்புடன்
கி சுரேஷ்குமார்

புதன், 7 அக்டோபர், 2015

நல்வரவு

தங்கள் நல்வரவுக்கு நன்றி 


                           இந்த தளம் தொடங்கபட்டது முற்றிலும் தமிழர்களுக்காக தமிழில் பங்கு சந்தை பற்றிய செய்திகள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே. இங்கு பங்கு சந்தை பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள், பங்கு சந்தை பற்றிய வகுப்புகள் (முற்றிலும் தமிழில்), பங்கு வாங்குவதற்கான பரிந்துரைகள் மேலும் ஜோதிட ரீதியாக ஒருவர் பங்குசந்தையில் ஈடுபடலாமா? எந்த மாதிரியான வர்த்தகத்தில் அவர்கள் ஈடுபடலாம் என்ற பரிந்துரைகள் வழங்கபடும்.

நன்றியுடன்
K சுரேஷ்குமார்

Kaalabiravaa almanac

Kaalabiravaa almanac